News November 18, 2025
திருச்சி: ஒரே நாளில் பெறப்பட்ட 556 மனுக்கள்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று (நவ.17) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 556 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
திருச்சி: அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் இருந்து திண்ணியும் செல்லும் பாதையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தரும் உணவை வாங்கி உண்டு இப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். திடீரென இவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்தவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!