News April 24, 2024
51ஆவது இடத்தில் இந்தியா

வணிக ரீதியாக உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 51ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், வலுவான பொருளாதாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பரந்த சந்தை வாய்ப்பு, இளையோர் எண்ணிக்கை, கொள்கை மாற்றம் நோக்கிய செயல்பாடுகள் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யச் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
நீங்களும் இப்படி ஏமாறலாம்.. உஷார் மக்களே!

டெக்னாலஜி வளர, வளர மோசடிகளும் அதிகரித்து கொண்டே போகின்றன. இது புது ரகம். உங்கள் நண்பரின் நண்பர் என ஒருவர் போன் செய்து பேசுவார். அப்போது 2nd call வரும். அது உங்கள் நண்பரின் அழைப்புதான், Attend செய்து, Call Merge செய்ய சொல்கின்றனர். அதை செய்தால், உங்கள் போனின் மொத்த கட்டுப்பாடும் அவர்களிடம் சென்று விடுகிறது. ஈசியாக, வங்கியின் OTP அழைப்பை, தெரிந்து கொண்டு மொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.
News November 12, 2025
பிஹார் தேர்தல்: புதிய கருத்துக்கணிப்பு

நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 121 – 141 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக Axis My India கணித்துள்ளது. மேலும், மகாகட்பந்தன் கூட்டணி 98 – 118 இடங்களிலும், மற்றவை 0 – 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாம். நேற்று வெளியிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளிலும் NDA கூட்டணிக்கே வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
பாரதியார் பாடல் ஸ்டைலில் திமுகவை விமர்சித்த விஜய்

தவெகவிற்கு எதிராக அவதூறு அரசியல் ஆட்டத்தை திமுக தொடங்கிவிட்டதாக விஜய் சாடியுள்ளார். பெரியார், அண்ணா கொள்கைகளை திமுகவினர் மறந்துவிட்டதாகவும், அவர்கள் TVK-ஐ கொள்கையற்றவர்கள் என்று கூறிட மன உளைச்சலே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாரதியார் பாடலை மாற்றி, பவளவிழா பாப்பா நீ.. பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா.. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து.. நாடே சிரிக்கிறது பாப்பா என விஜய் விமர்சித்துள்ளார்.


