News April 24, 2024

மதுரையில் இன்று முதல் துவக்கம்

image

மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை <>https://rte.tnschools.gov.in/<<>> என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதில், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News January 7, 2026

மதுரையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் ஜனவரி 16, 17 உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News January 7, 2026

மதுரை: காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு..

image

பேரையூர் அருகே கொலவீரன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கற்பகவல்லி (64). இவரை காணவில்லை என கல்லுப்பட்டி போலீசில் இரு தினங்களுக்கு முன்பு இவரது மகன் முத்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வில்லூர் கண்மாய் எதிரே உள்ள இந்திராணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் கற்பகவல்லி பிணமாக நேற்று முன்தினம் ( ஜன.5 ) மிதந்துள்ளார். உடலை மீட்டு பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கியாஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. காலாவதியான கியஸ் சிலிண்டர் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!