News April 24, 2024
கேசிஆர் மகள் ஜாமின் மனு மீது மே 2இல் உத்தரவு

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஜாமின்கோரித் தாக்கல் செய்த மனு மீது மே 2ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மதுபானக் கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து சிபிஐ அமைப்பும் வழக்குப்பதிந்து கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமின்கோரிக் கவிதா தாக்கல் செய்த மனு மீது மே 2இல் உத்தரவு பிறப்பிக்கப்படுமென டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Similar News
News January 22, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 22, 2026
60 வயது டீச்சருடன் 22 வயது பெண் திருமணம் ❤️❤️ PHOTO

காதலுக்கு கண் மட்டுமல்ல, வயதும் கிடையாது. இத்தாலியை சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் மினியா பாக்னி(22) தான் அதற்கு உதாரணம். பள்ளியில் தனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் மாசிமோவை அவர் கரம்பிடித்துள்ளார். பள்ளி முடித்த பின் இருவருக்கும் இடையே தொடர்பில்லையாம். சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்தபோது காதல் மலர்ந்ததாக மினியா தெரிவித்துள்ளார். 38 வயது மூத்தவரை மினியா திருமணம் செய்தது விமர்சிக்கப்பட்டும் வருகிறது.
News January 22, 2026
‘தீ பரவட்டும்’ CM ஸ்டாலின் கடிதம்

பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக் கேட்கும் துணிச்சல் திமுகவுக்கே உள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி அவர் எழுதிய கடிதத்தில், 2026 தேர்தல் களமானது ஆரிய-திராவிட போரின் மற்றொரு களம்; இந்த ஜனநாயகப் போர்க்களத்தில் திமுகவினருக்கு ஓய்வில்லை, உறக்கமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தீ பரவட்டும் என இனம், மொழி காத்திடும் போரை தொடர்ந்திடுவோம் என தெரிவித்துள்ளார்.


