News April 24, 2024
எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்

முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர் மயிலாடுதுறை காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
Similar News
News January 19, 2026
நாகை: பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

நாகை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <
News January 19, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

நாகை மாவட்டத்தில் புகையான் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நெல் வயல்களில் 8 அடிக்கு 1 அடி பட்டம் பிரித்து விட வேண்டும். வயலில் உள்ள தண்ணீரை உடனடியாக வடிகட்டுதல், தேவைக்கு அதிகமாக யூரியா இடுவதை தவிர்த்தல், வேப்ப எண்ணெய் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை 1 லி தண்ணீருக்கு 3 மி.லி என்ற வீதத்தில் கலந்து தெளித்து புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
நாகை: தேவை இல்லாத CALL-களை தடுக்க சூப்பர் வழி!

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


