News April 24, 2024
நாளை திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் கூவாகத்தில் குவிந்துள்ளனர்.
Similar News
News January 10, 2026
கல்வராயன் மலையில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போது, இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்தது. ஜாகிர்தார்கள் எனப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி, நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
கள்ளக்குறிச்சி: பிழைப்பு தேடி சென்ற இடத்தில் தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (34) என்பவர் திருவள்ளூர் போளிவாக்கம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பிரகாஷிற்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால், சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 10, 2026
கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


