News April 24, 2024
இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் ராஜினாமா

ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் அஹரான் ஹலிவா ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் பலியாகினர். மேலும் 250 பேரைச் சிறைபிடித்துச் சென்றனர். இதை முன்கூட்டித் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று ஹலிவா பதவி விலகியுள்ளார்.
Similar News
News January 16, 2026
அடுத்து அதிமுக ஆட்சி தான்! அடித்து சொன்ன EPS

TN-ல் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை விரட்ட மக்கள் காத்திருப்பதாக EPS தெரிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்த நாளையொட்டி (ஜன.17), தொண்டர்களுக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்களை தீட்டினாலும் அதை தவிடுபொடியாக்கி அதிமுக வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். TN மக்களுக்கு நல்லாட்சி தரும் கடமை, பொறுப்பு அதிமுகவினர் அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 16, 2026
காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.
News January 16, 2026
NDA கூட்டணியில் தேமுதிக, OPS இல்லையா?

NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில், அன்புமணி, ஜி.கே.வாசன், TTV, ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் <<18871079>>போட்டோஸ் <<>>இடம்பெற்றுள்ளன. ஆனால், பிரேமலதா, OPS, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் போட்டோஸ் இடம்பெறவில்லை. இதன்மூலம், NDA கூட்டணியில் தேமுதிக, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகம், புதிய தமிழகம் தற்போதுவரை இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


