News April 24, 2024
சாலையின் தடுப்பில் மோதி கொத்தனார் பலி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார் (26). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் தினேஷ் என்பவருடன் காணியாளம்பட்டி சாலையில் அதிவேகமாக சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 10, 2026
கலை நிகழ்ச்சியில் கலக்கிய குளித்தலை மாணவர்கள்!

கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிருஷ்ணவேணி, ரம்யா, கீர்த்தனா, ரங்கராஜ், யுவராஜா ஆகியோர் திருச்சி தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போட்டிகளில் மவுன நாடகப் பிரிவில் மூன்றாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு பேராசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News January 10, 2026
கரூரில் பெண் உட்பட 4 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் மாயனூர், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, குளித்தலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற முருகன் (54), அம்மையப்பன் (29), மலர்கொடி (41), சண்முகம் (50) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News January 10, 2026
கரூர் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<


