News November 17, 2025
வேலூரில் 4 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

வேலூரில் வருவாய் அலகில் 4 தாசில்தார்களை நேற்று (நவ16) பணியிட மாற்றம் செய்து கலெக்டர் இரா.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோடீஸ்வரன் வேலூர் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், வேலூர் கிழங்கு மேலாளராக (டாஸ்மாக்) பணியாற்றி வந்த செல்வி வேலூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தனி தாசில்தார் ஆகவும் பணி மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News November 17, 2025
வேலூரில் மட்டும் 162 சைபர் கிரைம் புகார்கள்!

வேலூர்: கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரை மாவட்ட சைபர் கிரைமில் 162 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அரெஸ்ட், பங்குச்சந்தை முதலீடு என ரூ.1.68 கோடிக்கு பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் இதுவரை ரூ.11.25 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளது.

வேலூர்: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்..கலெக்டர் அறிவிப்பு!

வேலூர்: இம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (நவ.21)-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.