News April 24, 2024

டு பிளெசிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

image

ஆட்ட நடத்தை விதிகளை மீறியதற்காக ரூ.12 லட்சத்தை அபராதமாகச் செலுத்துமாறு RCB அணியின் கேப்டன் டு பிளெசிக்கு பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் நடந்த 36ஆவது லீக் போட்டியில், KKR-க்கு எதிராக RCB அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. பந்து வீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தால் பிளெசிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

FLASH: தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகிறது!

image

அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் வரும் 22-ம் தேதி கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இருகட்சி தலைவர்களும் டெல்லி, சென்னை என பயணித்து ஆலோசனைகளை நடத்தி முடித்துவிட்டனர். வரும் 23-ம் தேதி மதுராந்தகத்தில் PM மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் NDA-ல் இடம் பெறும் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற, பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

News January 19, 2026

கொஞ்சம் பொறுப்புடன் இருங்க நெட்டிசன்ஸ்!

image

சோஷியல் மீடியா யுகத்தில் எல்லாமே Content. வெளிவரும் அனைத்து வீடியோவையும் உடனே நம்பி, ஒருவர் மீது விமர்சனங்களை கொட்ட வேண்டாம். <<18894136>>கேரளாவில் <<>>பெண் ஒருவர் குற்றம்சாட்டியதில், அவமானம் தாங்க முடியாத ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொஞ்சம் யோசியுங்கள். ஒருநாள் நாமும் இதேபோன்ற ஒரு சூழலால் பாதிக்கப்படலாம் என்பதையும் உணருங்கள். எங்கோ யாரோ வேறு ஒருவரின் கமெண்ட்டும் ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கலாம்!

News January 19, 2026

அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது: அன்பில் மகேஸ்

image

2003-ல் ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்த அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை மேற்கோள்காட்டிய அவர், 5 ஆண்டுகளாக அதை செய்யாமல், திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன் என்றார். மேலும், இது தேர்தல் நாடகம்தான் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!