News April 24, 2024
மோடி மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பெண்களின் தாலி உள்ளிட்ட சொத்துகளை முஸ்லிம்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் காங்கிரஸ் அளித்துவிடும் எனப் பேசியதற்கு மோடி மீது ஏன் EC நடவடிக்கை எடுக்கவில்லை என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், மோடியின் பேச்சைச் சுட்டிக்காட்டி, நாட்டில் அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்ததில்லை என்றார். மோடியிடம் விளக்கம் கேட்டுத் EC நோட்டீஸ் அனுப்பவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News August 22, 2025
TechTalk: WiFi Speed குறையுதா? நீங்களே சரி செய்யலாம்

வீட்ல இருக்க சில பொருட்கள், உதாரணத்துக்கு கண்ணாடி, இரும்பு மரச்சாமான், நீர் நிரப்பிய பெரிய குடுவைகள், ப்ளூடூத் சாதனங்கள், இதெல்லாம் WiFi சிக்னலை தடுக்குமாம். இதனால் இன்டர்நெட் வேகம் குறையலாம்னு Experts சொல்றாங்க. இதுக்கு எளிய தீர்வு என்னன்னா, WiFi Router-ஐ வீட்டின் நடுப்பகுதியில், உயரமாக, திறந்த இடத்தில் வைத்து பார்க்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News August 22, 2025
சிறுபான்மையினருக்கு நெருக்கடி: CM ஸ்டாலின்

சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CM ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.
News August 22, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. CM ஸ்டாலின் முடிவு

பொங்கல் பரிசுத் தொகையாக <<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க CM ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இத்துடன் வழக்கம்போல் வழங்கப்படும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றையும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. SHARE IT