News April 24, 2024
தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை – இணை இயக்குநர் தகவல்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் பறவைகள் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி நேற்று கூறுகையில், “தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை” என தெரிவித்தார்.
Similar News
News February 19, 2026
கோவையில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கோவை – பீளமேடு ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் மோதி உயிரிழந்தார். கருப்பு நிற பனியன் மற்றும் காவி நிற வேட்டி அணிந்திருந்த அவரிடம் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 19, 2026
“காந்திபுரம்” – மயில்சாமி அண்ணாதுரை நெகிழ்ச்சி!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நான் இந்த காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் பெங்களூர் சென்றேன். தற்போது இதே காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சந்திரயான் மாதிரியை திறந்து வைத்துள்ளேன். பெருமையாக உள்ளது. கோவையில் இருந்தும் சந்திரயானுக்கு உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது எனக்கு தெரியும். அறிவியலில் கோவை மாவட்டம் நல்லிடத்தில் உள்ளது” என்றார்.
News February 19, 2026
கோவை: எஸ்பிஐ வங்கியில் 2,050 பணியிடங்கள்!

கோவை மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க


