News April 22, 2024
விருதுநகர் அருகே விபத்து; மரணம்

அருப்புக்கோட்டை ஜெயராம் நகரை சேர்ந்தவர் நாகசுந்தரேஸ்வரன் (18).காந்தி நகரில் உள்ள தனியார் டிசைனர் கம்பெனியில் வேலை செய்து வந்த நாகசுந்தரேஸ்வரன் கம்பெனியிலிருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.திடீரென நாய் குறுக்கே வந்ததால் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து நாகசுந்தரேஸ்வரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.தாலுகா போலீசார் நேற்று ஏப்ரல் 21 வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
சிவகாசி: அரிவாளால் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மம்சாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த முருகானந்தம் பேருந்தை மறித்து ஓட்டுநர் பார்த்திபனிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரசு பேருந்தின் கண்ணாடியை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் ஓட்டுநர் அளித்த புகாரில் முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
News January 19, 2026
விருதுநகரில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர், நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது நிலையை எண்ணி விரக்தி அடைந்து சில நாட்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை.
News January 18, 2026
விருதுநகர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

விருதுநகர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க


