News April 22, 2024
குமரி: முருகன் கோயிலில் நிலாச்சோறு விருந்து

குமரி மாவட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி நாளான நாளை(ஏப்.23) காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை, வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன நடக்கிறது. வெள்ளி அங்கி சார்த்தி சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நிலாச்சோறு விருந்து தொடங்குகிறது.
Similar News
News January 11, 2026
குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 11, 2026
குமரி கலங்கரை விளக்கத்தை 67,000 பேர் பார்வையிட்டனர்

கன்னியாகுமரி பஸ் நிலையம் செல்லும் வழியில் கலங்கரை விளக்கம் உள்ளது. 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கத்தை கடந்த ஆண்டு (2025) மட்டும் 67 ஆயிரத்து 792 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதில் 59,099 பெரியவர்களும், 8544 சிறியவர்கள் பார்வையிட்டு உள்ளனர். மேலும், வெளிநாட்டினர் 149 பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 11, 2026
திருநங்கை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அன்று சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய குமரி மாவட்ட திருநங்கை ஒருவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன், சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள திருநங்கைகள் http://awards.tn.gov.in என்ற
இணையதளத்தில் பிப்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


