News November 17, 2025
புதுவை சைபர் கிரைம் எஸ்.பி அறிவுறுத்தல்

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் கடந்த 10 மாதத்தில் பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களில் மக்கள் ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் வரும் பொய்யான தகவலை நம்பி எமாறவேண்டாம்.” என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 17, 2025
புதுச்சேரி: இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர்

முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபியாவில், மெக்காவில் நடந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 இசுலாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.