News April 22, 2024
தடபுடலாக தயாராகும் சித்திரை திருவிழா பொருட்காட்சி!

சிவகாசியில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வரும் 30ஆம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி வரும் 26ம் தேதி முதல் சித்திரை திருவிழா பொருட்காட்சி துவங்க உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெறவுள்ள பொருட்காட்சிக்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் பொதுமக்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக மெகா வடிவ ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளது.
Similar News
News January 13, 2026
விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 13, 2026
விருதுநகர்: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
விருதுநகர் நரேந்திரக்குமாருக்கு விருது அறிவித்த அரசு

மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் வகைபாட்டில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் விருதுநகரை சேர்ந்த இரா.நரேந்திரக்குமாருக்கு(74) படைப்புத் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன. 16 அன்று வழங்க உள்ளார்.


