News April 22, 2024

ஆர்.டி மலையில் சிவன் கோவில் பிரதோஷ வழிபாடு

image

குளித்தலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

Similar News

News April 25, 2025

ஆரம்பமாகிறது தமிழக அரசின் இலவச பயிற்சி

image

தமிழக அரசின் விளையாட்டு துறை சார்பாக கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று 25.4.25 முதல் 15.5.25 வரை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு மட்டுமே கலந்து கொள்ள முடியும். கரூர் மாவட்ட கேலோ இந்தியா ஜூடோ பயிற்சியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

உதவி லோகோ பைலட்’ பணி; உடனே விண்ணப்பியுங்கள்

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை <>rrbchennai.gov.in<<>> என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.

News April 25, 2025

திருச்சி-பாலக்காடு ரெயில் சேவைகளில் மாற்றம் கரூர் வரை இயங்கும்

image

சேலம் கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

error: Content is protected !!