News April 22, 2024
வெயிலின் தாக்கத்தை தீர்த்த நண்பர்கள் சங்கம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் கூல் பிரண்ட்ஸ் நண்பர்கள் சங்கம் இப்பகுதியில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் பொதக்குடி சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் தர்ப்பூசணிப்பழம், ஐஸ் மோர் ரோஸ்மில்க் போன்ற குளிர் பானங்களை வழங்கினர்.
Similar News
News November 27, 2025
திருவாரூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கோரையாறு பகுதியில் சப்.இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முகம்மது ஹாலிக் (19) என்பவர் 150 கிராம் எடையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முகம்மது ஹாலிக் மீது வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
News November 27, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டதின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.27) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
திருவாரூர்: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..


