News April 22, 2024
மறு வாக்குப்பதிவு நடத்த தமிழக பாஜக கோரிக்கை

எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ, அந்த தொகுதிகளில் மீண்டும் அவர்களை சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்க கூடியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திமுகவினர் கடைசி நேரத்தில் நீக்கி உள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலை, எல்.முருகன் போட்டியிடும் தொகுதிகளில் தலா 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
லெட்டர் பேடு கட்சிகளுடன் அதிமுக கூட்டணி: ரகுபதி

அதிமுக – பாஜக கூட்டணி தேய்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வலுவாக அமையாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். லெட்டர் பேடு கட்சிகள்தான் அதிமுக கூட்டணிக்கு செல்லும் எனக் கூறிய அவர், எங்களுக்கு யாரும் நெருக்கடி தர முடியாது என்று காங்., கட்சியினருக்கும் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். மேலும், ஜன நாயகன் படத்துக்காக விஜய் குரல் கொடுக்காததை வைத்தே, அவருடைய தைரியத்தை தெரிந்துக் கொள்ளலாம் எனவும் சாடினார்.
News January 14, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹15,000 மாறியது

<<18853147>>ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ஒரே நாளில் ₹15 உயர்ந்து ₹307-க்கும், கிலோ வெள்ளி ₹15,000 உயர்ந்து ₹3,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹50 ஆயிரம் அதிகரித்துள்ளது. பலர் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்வதால், தட்டுப்பாடும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
News January 14, 2026
தமிழில் தொடங்கி, தமிழில் முடித்த PM மோடி!

டெல்லியில் நடந்த <<18853863>>பொங்கல் விழாவில்<<>>, பொங்கல் வாழ்த்தை தமிழில் கூறி, PM மோடி தனது உரையை தொடங்கினார். உலகின் பழமையான தமிழ் கலாசாரம் இந்தியாவின் பெருமை என்று புகழ்ந்த அவர், தமிழ் சமுதாயம் விவசாயிகளை வாழ்வின் ஒரு அங்கமாக கருதுவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், ‘வாழ்க தமிழ், வாழ்க பாரதம்’ என்று தமிழிலேயே கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.


