News April 22, 2024
பஞ்சு ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருப்பூரைச் சேர்ந்தவர் செவடமுத்து. சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். ஊத்துக்குளியிலிருந்து நூல் மில்லுக்கு தேவைப்படும் கழிவு பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. வேனை திருவாரூரைச் சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டிவந்தார். வெள்ளகோவில் காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மின் கம்பியில் உரசி எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.
Similar News
News November 4, 2025
திருப்பூரில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தாராபுரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஆரோக்கியதாஸ் என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ பிரிவின் கீழ் ஆரோக்கியதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News November 3, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், காங்கேயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 3, 2025
திருப்பூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!


