News April 22, 2024
இம்முறையும் காங்கிரஸ் 40 இடங்களை தாண்டாது

மக்களவைத் தேர்தலில் ஊழல் கூட்டணியான I.N.D.I.A கூட்டணி துடைத்தெறியப்படுமென மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், 150 தொகுதிகளைக் கூட பாஜக கைப்பற்றாதென்ற ராகுலின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இம்முறையும் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை தாண்டுவதற்கு போராடுமென விமர்சித்த அவர், பாஜகவுக்கு மக்கள் 400க்கும் மேற்பட்ட இடங்களை அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
நாட்டின் முக்கிய தொழிலதிபர் காலமானார்

நாட்டின் எஃகு உற்பத்தித் துறையின் ஜாம்பவானும், முக்கிய தொழிலதிபருமான மோகன் லால் மிட்டல்(99) காலமானார். ராஜஸ்தானின் ராஜ்கர் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் உயர்ந்தவர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கிய உன்னத மனிதரை இழந்துவிட்டோம் என மோகன் லால் மறைவுக்கு PM மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #RIP
News January 17, 2026
காலை வெறும் வயிற்றில் இத குடிங்க..

காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன், செரிமான மேம்பாடு, முடி வளர்ச்சி, உடல் எடையை குறைக்க, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது. இதிலிருக்கும் சத்துக்களை குறைக்கலாம் என்பதால் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டாம். SHARE.
News January 17, 2026
நடப்பது Vs படிக்கட்டில் ஏறுவது: FAT-ஐ குறைக்க எது பெஸ்ட்?

கொழுப்பை குறைக்க, கலோரிகளை எரிக்க நடப்பதும், படிக்கட்டுகளில் ஏறுவதும் சிறந்த தேர்வு. *நடப்பது: எந்த வயதினரும் பாதுகாப்பாக செய்யக்கூடியது, வேகமாக நடந்தால் அதிக கலோரிகளை எரிக்கலாம், மன அழுத்தத்தை குறைக்கும். *படிக்கட்டுகளில் ஏறுவது: நடப்பதை விட கடினம். ஆனால், இடுப்பு, கால் தசைகள், உடலின் மைய தசைகளுக்கு அழுத்தம் கொடுத்து வேகமாக அதிக கலோரிகளை எரிக்க உதவும். வயது, உடல் வலிமைக்கேற்ப தேர்வு செய்யுங்கள்!


