News April 22, 2024
மாலத்தீவு தேர்தலில் முகமது முய்சு கட்சி வெற்றி

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது முய்சுவின் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 93 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், இதுவரை 86 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் 66 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி 10 தொகுதிகளில் வென்றுள்ளது.
Similar News
News January 7, 2026
NDA-வின் எதிர்காலத்தை கணித்த காங்., MP

NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை விட பூஜ்ஜியம் என சொல்லலாம் என MP சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். பாஜகவின் வெறுப்பு அரசியல் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக கூறிய அவர், TN-ல் பாஜக என்ன சதி வேலை செய்ய நினைக்கிறது என மக்களுக்கு தெரியும் எனவும் பேசியுள்ளார். மேலும், பாஜக உடன் கூட்டணி வைக்கும் கட்சியை மக்கள் ஏற்கப்போவதில்லை என்ற அவர் இக்கூட்டணி வரலாறு காணாத தோல்வியை தழுவும் என்றார்.
News January 7, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில CM ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டு வரும் ₹1,000 உரிமைத்தொகையானது, வரும் 12-ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ₹2,500 ஆக வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் அரசு விழாவில் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.
News January 7, 2026
ஆதார் அப்டேட்.. ஜூன் 14-ம் தேதி வரை இலவசம்!

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, போன் நம்பர், பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது அவசியம். இந்த தகவல்களை ஆன்லைனில் <


