News April 21, 2024
காங்கிரஸ், RJD இடையே மோதல்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் திடீரென இரண்டு கட்சியினரும் நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். பாஜக இதனை ‘வன ராஜ்ஜியம்’ என்று விமர்சனம் செய்துள்ளது.
Similar News
News January 12, 2026
ஒன்றாக டெல்லி செல்லும் நயினார், அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஒன்றாக நாளை மாலை டெல்லி செல்கின்றனர். ஜன.14-ம் தேதி அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடியுடன் பொங்கல் விழாவில் இருவரும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தற்போதைய தமிழக அரசியல் சூழல், கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
News January 12, 2026
BREAKING: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை! அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போகி அன்றும் (ஜன.14) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.15 முதல் ஜன.17 வரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஒருநாள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
வீட்டிலேயே பழங்களை வளர்த்து சாப்பிட ஆசையா?

தோட்டம் இல்லாதவர்களும் பழங்களை வளர்த்து சாப்பிட வேண்டுமா? வீட்டு மாடியில் அல்லது பால்கனியில் சில வகையான பழச் செடிகளை வளர்க்கலாம். குட்டை ரக செடிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பூந்தொட்டியில் வைத்து வீடுகளிலேயே வளர்க்கலாம். இந்த செடிகளுக்கு 6-8 நேரம் சூரிய ஒளியும், சரியான பராமரிப்பும் தேவை. அந்த வகையில், என்னென்ன பழச் செடிகள் வளர்க்கலாம் என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.


