News April 21, 2024
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை

KKR அணி வீரர் சுனில் நரைன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். RCB அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய நபர் என்ற சாதனை படைத்துள்ளார். KKR அணிக்காக 172 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து மலிங்கா (170-MI), புவனேஷ்வர் குமார் (150-SRH) மற்றும் பிராவோ (140-CSK) ஆகியோர் உள்ளனர்.
Similar News
News February 4, 2026
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா?

கடந்தமுறை அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோற்ற அண்ணாமலை இம்முறை தொகுதி மாறி திட்டமிட்டுள்ளாராம். கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் நல்ல வாக்குகளை பெற்றதால், சிங்காநல்லூர், பல்லடம் அல்லது சூலூரில் போட்டியிட ஆலோசிக்கிறாராம். அதிமுக வாக்குகளும் கைகொடுத்தால் MLA ஆகிவிடலாம் என அண்ணாமலை நம்புகிறாராம்.
News February 4, 2026
இந்த வார ஓடிடி ட்ரீட்!

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க பல படங்கள், வெப்சீரிஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன *பிரபாஸின் ‘ராஜாசாப்’ : பிப்.6, ஜியோ ஹாட்ஸ்டார் *சரத்குமாரின் ‘கொம்புசீவி’ : பிப்.6, டெண்ட்கொட்டா *மகேந்திரனின் ‘ நீலகண்டா’: பிப்.6, சன் நெக்ஸ்ட் *’பராசக்தி’: பிப்.7, ஜீ5 *ஷர்வானந்தின் ‘நாரி நாரி நடுமா முராரி ‘: பிப்.4, அமேசான் பிரைம் * ‘The Investigation of Lucy Letby’: பிப்.4, நெட்பிளிக்ஸ்
News February 4, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 601
▶குறள்:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
▶பொருள்: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.


