News April 21, 2024

அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு

image

மன்னார்குடி நகரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், சோழீஸ்வரர் கோயில், திருப்பாற்கடல் தெரு காசிவிஸ்வநாதர் கோயில் ஆகிய 8 கோயில்களில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியையும் பெருமானையும் வழிபட்டனர்.

Similar News

News September 4, 2025

திருவாரூர் மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

திருவாரூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News September 4, 2025

திருவாரூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

image

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News September 4, 2025

திருவாரூர்: நுகர் பொருள் வாணிப கழகத்தில் தவெகவினர் மனு

image

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயம் செய்யும் நெல்களை கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்காக கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி மாவட்ட நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில்நேற்று (செப்டம்பர் 3) திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் திருவாரூர் மாவட்ட தவெகவினர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!