News April 21, 2024
EMI-இல் பொருள் வாங்க போகிறீர்களா?

தற்போதைய சூழலில் நடுத்தர மக்கள் மாதத் தவணையில் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. பலர் EMI-இல் சிக்கி கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், EMI மூலம் பொருள்களை வாங்குவதாக இருந்தால் ‘40% EMI’ விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, உங்களது மொத்த சம்பளத்தில் மாத EMI 40%ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Similar News
News November 17, 2025
2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. Alert

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 17, 2025
தெலங்கானா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

தெலங்கானா சபாநாயகர் பிரசாத் குமாருக்கு SC கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2023 தேர்தலில், காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த போது, BRS கட்சியின் 10 MLA-க்கள் அக்கட்சிக்கு தாவினர். அவர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் BRS-ன் மனு மீது, SC ஆணையிட்டும் சபாநாயகர் செயல்படவில்லை. இதையடுத்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்காவிட்டால், புத்தாண்டில் எங்கு இருப்பது என்பது உங்கள் கையில் என சபாநாயகரை SC எச்சரித்துள்ளது.
News November 17, 2025
பூதாகரமாகும் லாலுவின் குடும்ப பிரச்னை

தேஜஸ்வி யாதவ் செருப்பால் அடிக்கவந்ததாக லாலுவின் மகள் ரோஹினி கூறிய சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள், மேலும் 3 மகள்கள் ராஜலஷ்மி, ராகினி, சண்டா ஆகியோரும் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். குடும்பத்தில் நடக்கும் தகராறு காரணமாக அவர்கள் டெல்லிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது குடும்ப பிரச்னை கட்சியை பாதிக்குமோ என தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


