News April 21, 2024

மென்று முழுங்கும் தேர்தல் ஆணையம்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகக் கூறிய தேர்தல் ஆணையம், தற்போது 69.72 சதவீதம் மட்டுமே பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், கணக்கீட்டில் இவ்வளவு மாறுபாடு இருப்பதற்கான காரணம் என்னவென்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. உரிய விளக்கம் அளிக்குமா தேர்தல் ஆணையம்?

Similar News

News November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: வெளியான பரபரப்பு தகவல்கள்

image

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலில் குடியரசு தினம் மற்றும் தீபாவளி அன்று மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கைதான உமர் நபி மற்றும் உமர் முகமது ஆகியோர் செங்கோட்டையில் பலமுறை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக NIA கைதான 9 பேரிடம் விசாரணை நடத்திவருகிறது.

News November 12, 2025

டெல்லியில் காற்று மாசு அவசர நிலை

image

டெல்லியில் காற்று தரக்குறியீடு 428 ஆக உயர்ந்து, இந்த ஆண்டின் மிக மோசமான மாசு நிலையை எட்டியுள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு அதிக மாசு ஆகும். இதனால், டெல்லி முழுவதும் GRAP-3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. *கட்டுமான, இடிப்பு பணிகளுக்கு தடை *BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் 4 சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு *5-ம் வகுப்பு வரை பள்ளிகளில் Hybrid முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவு.

News November 12, 2025

தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

image

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​தி​யா​வின் பிரக்ஞானந்​தாவும், பொது வீர​ராக பங்​கேற்​ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்​னர் 41-வது நகர்த்​தலில் ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது.

error: Content is protected !!