News April 21, 2024

சமையல் செய்த போது தீப்பிடித்து மூதாட்டி பலி

image

வேலுார் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (72). இவர் கடந்த 10ம் தேதி சமையல் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது இதில் காயமடைந்த ருக்மணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி நேற்றிரவு (ஏப்ரல் 20) இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 20, 2025

வேலூர்: டிகிரி போதும்.. LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025. இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 20, 2025

வேலூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்

image

வேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 21 ) மின்பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேலூர் டவுன், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், விருதம்பட்டு, செங்காநத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, சைதாப்பேட்டை பி.டி.சி.ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்

News August 20, 2025

வேலூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்! (2/2)

image

இத்திட்டத்தின் மூலம் 60% சிறுபான்மையினர் மற்றும் 40% இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க
▶️ வருமானச் சான்றிதழ்
▶️ சாதிச் சான்றிதழ்
▶️ பள்ளி மாற்றுச் சான்றிதழ்
▶️ இருப்பிடச் சான்றிதழ்
▶️ குடும்ப அட்டை
▶️ ஆதார் அட்டை
▶️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!