News April 21, 2024
3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும்

தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் ஏப்.25 வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது அசெளகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வான சுதாகர் ரெட்டி, 2012 -19 வரை இந்திய கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
News August 23, 2025
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான தூதராகவும் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இவர் அரசுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாகவும் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கடந்த ஜன.20 முதல் ஜோர்கன் கே ஆண்ட்ரூஸ் இந்தியாவில் உள்ள USA தூதரகத்தின் இடைக்கால பொறுப்பாளராக உள்ளார்.
News August 23, 2025
கூட்டணி ஆட்சி குழப்பம்.. அதிமுக மா.செக்கள் கூட்டம்

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற BJP பூத் கமிட்டி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது மீண்டும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.