News November 17, 2025
நாகை: ஆற்றில் மூழ்கிய மாணவன் பிணமாக மீட்பு

நாகை மாவட்டம், அம்பல் ஊராட்சி, பொறக்குடி குணர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் இளங்கேஸ்வரன் (17). இவர் பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அரசற்றில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் மூழ்கி மாயமாகியுளார். இந்நிலையில் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு இளங்கேஸ்வரனை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்.
Similar News
News November 17, 2025
மாற்றத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நவ.17ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு காதொலி கருவி, 2 பேருக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.