News November 19, 2025
மேகதாது விவகாரத்தில் CM-க்கு கவலையில்லை: RB உதயகுமார்

மேகதாது அணை விவகாரத்தில் CM ஸ்டாலின் மெத்தனமாக செயல்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது விவகாரத்தை பற்றி கவலைப்படாமல், SIR-க்கு போராட்டம் நடத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார். தனது சகோதரரான ராகுல்காந்தி மூலம் சித்தராமையாவுக்கு ஸ்டாலின் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News March 12, 2026
திருட்டு என்ஜின் தான் திமுக அரசு: TTV

PM மோடி கூறிய டபுள் இன்ஜின் அரசை டப்பா இன்ஜின் என விமர்சித்திருந்த CM ஸ்டாலின், தமிழகத்தில் அது எடுபடாது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,
அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு மத்திய அரசு உதவும் என்பதை தான் டபுள் இன்ஜின் அரசு என PM மோடி குறிப்பிட்டதாக TTV விளக்கியுள்ளார். மேலும், திமுக அரசை திருட்டு ரயில் இன்ஜின்; வித் அவுட் டிக்கெட் இன்ஜின் என்று அவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

இந்தியாவில் கேஸ் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதால், உள்நாட்டு LPG உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மூன்றே நாள்களில் 10%-ல் இருந்து 25% ஆக LPG உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் தயாரிப்பதில் முழுவீச்சில் ஈடுபடவும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளது. SHARE IT
News March 12, 2026
RCB அணியின் நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கல்

IPL தொடர் தொடங்குவதற்கு முன்னரே RCB அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு RCB-க்கு அதிக விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த ஜோஷ் ஹேசல்வுட், இந்த IPL-ல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவர் டி20 WC-ஐ தவறவிட்ட நிலையில், இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தெரிகிறது. ஏற்கெனவே மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் பங்கேற்பதில் சட்ட ரீதியான சிக்கல் உள்ளது.


