News April 21, 2024
தண்ணீர் தொட்டியில் குளித்த மாணவன் உயிரிழப்பு

கரூர் தோரணக்கல்பட்டி நேரு நகரைச் சேர்ந்த மனோகரன் மகன் மிதுன்(17), அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கே.எம்.புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் குளித்தபோது, இரும்பு குழாயில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் விசாரிக்கின்றனர்
Similar News
News April 17, 2025
கரூர் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

கரூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04324-257510 ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100
▶️தீ தடுப்பு பாதுகாப்பு 101 ▶️விபத்து அவசர வாகன உதவி 102 ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098 ▶️பெண்கள் உதவி எண் 181 ▶️முதியோர்கள் உதவி எண் 044-24350375 ▶️பேரிடர் கால உதவி1077 ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930, மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News April 17, 2025
கரூரில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி !

கரூர்:தாட்கோ மூலம், டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக, பல்வேறு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, குடும்ப வருமானம் 3 லட்சம் உள்ள 18 – 30 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க!
News April 17, 2025
போக்சோ கைதிக்கு நீதிமன்றம் தண்டனை !

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அப்துல் சமத் (59) என்பவர் மீது கரூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று(ஏப்.16) கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.