News April 21, 2024
தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்.13 முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாளை (ஏப்.22) மற்றும் நாளை மறுநாள் (ஏப்.23) ஆகிய தேதிகளில் விடுப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, மீண்டும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை தொடர்கிறது.
Similar News
News February 4, 2026
உச்சத்தை தொட்ட இந்தியா – சீனா வர்த்தகம்!

இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தகம் 2025-ல் ₹13,000 கோடியை எட்டியுள்ளதாக சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் தெரிவித்துள்ளார். இது இதுவரை இல்லாத அளவிலான உச்சபட்ச சாதனை என கூறியுள்ள அவர், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனா ஆதரவளிப்பதாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தியாவுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் சூ தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 4, 2026
வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு: CM ஸ்டாலின்

கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு ஹாஸ்பிடல், அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது என பாராட்டிய அவர், அரசு ஹாஸ்பிடலுக்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


