News April 21, 2024

தோல்விக்கான காரணம் குறித்து ரிஷப் பண்ட் விளக்கம்

image

‘பவர் பிளே’ தான் தோல்விக்கு காரணம் என டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், முதல் 6 ஓவர்களிலேயே எதிரணி 125 ரன்களை குவித்து விட்டது. அதன்பின் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆனால், 260-270 ரன்களை சேஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. அடுத்து வரும் போட்டிகளில், தெளிவான மனநிலையுடன் களமிறங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Similar News

News February 7, 2026

T20 WC: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

image

டி20 உலகக் கோப்பையில் இன்று குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்தியாவும், அமெரிக்காவும் மோதுகின்றன. மிகவும் வலுவான அணியாக திகழும் இந்தியா, இந்த போட்டியில் எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்த USA புது யுக்திகளுடன் களமிறங்கவுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு மும்பை வான்கடேவில் தொடங்குகிறது.

News February 7, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. இந்நிலையில், இன்று(பிப்.7) 1 அவுன்ஸ் $300 (இந்திய மதிப்பில் ₹27,172) உயர்ந்து $4,966-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 7, 2026

விஜய்யால் திமுகவுக்கே பாதிப்பு: TTV

image

திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கே வரும் என்று TTV கூறியுள்ளார். தேர்தலில் விஜய்யின் தாக்கம் திமுகவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அவர், யாரையெல்லாம் வாக்குவங்கியாக திமுக கொண்டுள்ளதோ, அதில் விஜய் சரிவை உண்டாக்குவார் என நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், ஆட்சியின் மீது கோபம் இருந்தாலும், திமுகவுக்கு வாக்களிக்கும் அனுதாபிகள் இம்முறை விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்றார்.

error: Content is protected !!