News November 19, 2025
கார்த்திகை தீப திருவிழா.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

தி.மலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு TN அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. டிச.3-ல் மலையில் மகாதீபம் ஏற்றப்படும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். லட்சக்கணக்கானோர் கூடும் இந்த திருவிழாவிற்கு நெரிசலின்றி செல்ல, 4,764 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Similar News
News March 20, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு பேசிய EPS கூறியுள்ளார். திமுகவும் ஓரிரு நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 5 சவரன்(40 கிராம்) வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.
News March 20, 2026
கருணாநிதியின் டயலாக்கை மாற்றினாரா ஸ்டாலின்?

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், ‘சீட் கேட்டு வந்த எல்லோருக்கும் அறிவாலயத்தில் சீட் (உட்கார இருக்கை) கொடுத்திருக்கிறேன்’ என ஸ்டாலின் பேசியதாக திமுகவினர் கூறுகின்றனர். முன்னதாக, கருணாநிதி இருந்தபோது ஒருத்தருக்கு சீட் (வேட்பாளர்) கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு ‘என் இதயத்தில் இடம் இருக்கு’ என கூறுவாராம்.
News March 20, 2026
வாக்குச்சாவடிகளாக மாறுகிறதா அபார்ட்மென்ட்ஸ்?

தேர்தலில் வாக்களிப்பது நாட்டு குடிமகனின் ஜனநாயக கடமை. அதனை நிறைவேற்ற இந்தாண்டு ECI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் தவிர, அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இம்முறை வாக்குச்சாவடி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். எனினும் 3 நாள்கள் இடம் ஒதுக்க வேண்டும் என்பதால், அதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


