News April 21, 2024
திண்டுக்கல் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் கீழ் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- மாநில தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையும், மத்திய தேர்தல் ஒரு அறிக்கையும் வெளியிட்டது. இதனால் எத்தனை சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. என அரசியல் பிரமுகர், பொது மக்கள் குழப்பம் அடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 71.14% வாக்கு பதிவானது என அதிகார பூர்வமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Similar News
News November 20, 2024
திண்டுக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ➤திண்டுக்கல்: மாடு வளர்ப்போர் கவனத்திற்கு ➤நியாய விலைக்கடையில் ஆய்வு செய்த கலெக்டர் ➤இரவில் உலா வந்த 3 இளைஞர்கள்! வெளியான CCTV ➤அருள் இறங்கி ஆடிய கல்லூரி மாணவி ➤40 நாட்களுக்குப் பிறகு ரோப் கார் சேவை தொடக்கம் ➤எண்மத் தொழில் நுட்ப பயிர் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம் ➤பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு.
News November 20, 2024
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
News November 20, 2024
திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அவசர ஊர்திக்கு வழி விடுவோம், உயிரை காப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.