News November 17, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவ.18) காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது‌. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகையில் இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

image

இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நாகை EGS பிள்ளை கல்லூரி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை (நவ.18) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி, வயிற்றுப்புண், தோல் வியாதிகள், ஆஸ்துமா, சைனஸ், முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!