News November 17, 2025

வேலூரில் 753 பேர் ஆப்சென்ட்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, 32 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 8,263 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 7,510 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 753 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

image

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.

வேலூரில் 4 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

image

வேலூரில் வருவாய் அலகில் 4 தாசில்தார்களை நேற்று (நவ16) பணியிட மாற்றம் செய்து கலெக்டர் இரா.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோடீஸ்வரன் வேலூர் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், வேலூர் கிழங்கு மேலாளராக (டாஸ்மாக்) பணியாற்றி வந்த செல்வி வேலூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தனி தாசில்தார் ஆகவும் பணி மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!