News April 21, 2024

2 ராணுவ ஹெலிகாப்டர்கள் கடலில் விழுந்து விபத்து

image

ஜப்பானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 7 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை. பசிபிக் கடலில் இரவு நேர பயிற்சியில் அந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது 25 நிமிட இடைவெளியில் விபத்துக்குள்ளாகின. ஹெலிகாப்டர்களில் இருந்த 7 வீரர்களும் கடலில் மூழ்கியதால், அவர்களை தேடும் பணி நடக்கிறது. ஏப்ரல் மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலியாகினர்.

Similar News

News February 4, 2026

₹18,000 சம்பளம்.. 22,000 காலிபணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT.

News February 4, 2026

T20 WC: இன்று இந்தியா Vs தென்னாப்பிரிக்கா

image

டி20 உலகக் கோப்பை தொடருக்கு, முன்னோட்டமாக இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால், பிரதான ஆட்டங்களில் அவருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது. திலக் வர்மா அணிக்கு திரும்பியுள்ளதால், டீம் காம்பினேஷனில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். நவி மும்பையில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

News February 4, 2026

₹6,000 ஆக உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு.. HAPPY

image

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கான மதிப்பூதியத்தை ₹5,000-லிருந்து ₹6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இதற்காக ₹417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியத்தை ₹5,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது.

error: Content is protected !!