News November 17, 2025
BREAKING: முதல்வர் ஸ்டாலின் வீட்டில் பரபரப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள CM ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, போலீஸ் தலைமை இயக்குநர் இ-மெயிலுக்கு நள்ளிரவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதறிப்போன போலீசார் CM வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், சைபர் கிரைம் தீவிரமாக விசாரித்து வருகிறது.
Similar News
News March 28, 2026
கந்தர்வகோட்டைக்கு பதில் பாஜகவுக்கு புதிய தொகுதி?

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு பதிலாக வேறொரு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. EPS-வுடன் Ex அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து பேசி வருகிறார். அதில், கந்தர்வகோட்டை தொகுதியை மீண்டும் பெற்றுக்கொண்டு, சென்னையில் ஒரு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கலாம் என இருவரும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
BREAKING: சுந்தர்.சி தேர்தலில் போட்டி.. எந்த தொகுதி?

மதுரை மத்திய தொகுதியில், புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக நடிகர் சுந்தர்.சி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, வேலூரில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சுந்தர்.சி பரப்புரை செய்தார். தற்போது, அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்துள்ள அவர், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
என் மீது எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை: விஜய் சேதுபதி

தன் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். தன்னுடைய வேலையை மற்றவர்கள் பாராட்டிய பிறகுதான் தனக்கே அந்த வேலையை ’தன்னால் சிறப்பாக செய்யமுடியும்’ என்பது தெரியவரும் என பேசிய அவர், ஆனால், அதற்கு முன் தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் தனக்கு இருந்திருக்கிறார்கள் என்றார். இதுபோல் பலர் தன்னை நம்பியதால் தான், தன் தன்னம்பிக்கை வளர்ந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.


