News November 17, 2025
கிருஷ்ணகிரி: சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்த வெங்கட்ராஜ் ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்தவர் மஞ்சுநாத். மஞ்சுநாத் நடந்து சென்றபோது, அவரைப் பழிவாங்கும் நோக்குடன் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுவன் ஒருவன் உட்பட 4 பேரை ஒசூர் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Similar News
News March 12, 2026
கிருஷ்ணகிரியில் Group II & II A முதன்மைத் தேர்வு 15ம் தேதி !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் Group II மற்றும் II A முதன்மைத் தேர்வு மார்ச் 15ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (காந்தி ரோடு) வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு காலை 9.30 முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள், பிற்பகல் தேர்வுக்கு 1.30 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும்.
News March 12, 2026
உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் !

பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு வழங்கும் மானியம் ரூ.25,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்.
News March 12, 2026
ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஓட்டுநர் மட்டுமின்றி பின்புறத்தில் அமரும் பயணிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. விபத்து நேரங்களில் தலைக்காயங்களைத் தவிர்க்க ஹெல்மெட் முக்கிய பாதுகாப்பாகும். பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பு என்பதால் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக ஓட்டி உயிரை பாதுகாக்க வேண்டும்.


