News November 17, 2025

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

image

உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப்பணிகளுக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அனல்மின் நிலையத்தில் முதல் பாய்லர் சுத்தம் செய்ய சென்ற அசாமைச் சேர்ந்த தொழிலாளி முன்னா குர்மி (37) 15 அடிஏணியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பின் மண்டையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 17, 2025

தூத்துக்குடி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க

image

தூத்துக்குடி மக்களே; ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். மற்றவர்களும் இதை தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 17, 2025

தூத்துக்குடி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

image

தூத்துக்குடி மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!