News November 17, 2025
பிளவக்கல் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய் நிரம்பி 7,219 ஏக்கர் விவசாய நிலம், பெரியாறு பிரதானக கால்வாய் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தொடர் மழை காரணமாக 47 அடி கொண்ட பிளவக்கல் அணை 41 அடியை தாண்டியது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர் KKSSRR ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைக்கிறார்.
Similar News
News March 8, 2026
விருதுநகர்: 6ம் வகுப்பு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கரிக்கோல் ராஜ்(68). இவர் 6-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்களை அறைக்கு அழைத்து சென்று அவர்கள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவர்கள் அவர்களின் தந்தையிடம் கூறினர். இதனை தொடர்ந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 8, 2026
விருதுநகர்: பட்டாசு தயாரித்தவர் கைது

ஏழாயிரம்பண்ணை பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது கன்னக்குடும்பன்பட்டியை சேர்ந்த அறிவழகன்(55) முத்தாண்டியாபுரம் ரேஷன் கடை அருகில் தகர செட்டில் பேன்சி ரக பட்டாசுகLai தயாரித்துள்ளார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்த நிலையில் ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 7, 2026
விருதுநகர் : இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

விருதுநகர் மக்களே, திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <


