News November 17, 2025
புதுச்சேரி: இன்று விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (17/11/25) புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
புதுகை: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
புதுவை: பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர்கள் கைது

திருபுவனை போலீசார் ரோந்து சென்றபோது, மதகடிப்பட்டு பகுதியில் டியூசன் சென்டர் ஒன்றின் எதிரே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதில் கடலூர் கமலேஷ், விஷ்ணு ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 17, 2025
புதுவையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

புதுவை சாரம் தென்றல் நகரில் பொதுமக்களை கத்தியை காட்டி ஒரு கும்பல் மிரட்டுவதாக கோரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றபோது. அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுவையைச் சேர்ந்த சக்தி என்ற சத்திய மூர்த்தி, நைனார் மண்டபம் மாதேஷ், உருளையன்பேட்டை வேல்முருகன் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


