News November 17, 2025
CINEMA 360°: நாய்க்குட்டிக்கு பிறந்தாள் கொண்டாடிய திரிஷா

*டாப் ஸ்டார் பிரசாந்த் சினிமாவில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். *தனது நாய்க்குட்டிக்கு நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். *வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழை கிடைத்துள்ளது. *புதுமுகங்கள் நடித்துள்ள ‘பஞ்சாயத்து’ வெப் சீரிஸ் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
Similar News
News November 17, 2025
தோனிக்கும் KL ராகுலுக்கும் இடையே உள்ள ஸ்பெஷல்

தோனி என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும், KL ராகுலுக்கு கூடுதல் ஸ்பெஷல் போல. ஏனென்றால், தோனியிடம் இருந்து மட்டுமே தனது அனைத்து சர்வதேச போட்டிகளுக்கான cap-ஐயும் தான் பெற்றுள்ளதாக ராகுல் கூறியுள்ளார். இதுவே ஒரு தனித்துவம் தான் என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார். SA-க்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடியதன் மூலம், தோனி, கம்பீர், ரோஹித் வரிசையில் 4,000 டெஸ்ட் ரன்கள் கிளப்பில் ராகுல் இணைந்துள்ளார்.
News November 17, 2025
BREAKING: மழை அலர்ட்.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என IMD எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, காஞ்சி, தி.மலை, பெரம்பலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, நாகைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 17, 2025
தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போனது: தேஜ் பிரதாப்

தனது சகோதரி ரோஹிணியை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது என லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குரல் எழுப்பியுள்ளார். தனக்கு நடந்ததை கூட பொறுத்துக்கொள்வேன் என கூறிய அவர், தனது சகோதரிக்கு நடந்ததை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரோஹிணியை நோக்கி <<18303650>>செருப்பை<<>> காட்டியது தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியதாகவும், தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போய்விட்டது எனவும் சாடியுள்ளார்.


