News November 17, 2025
ரஜினி படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தில் இருந்து சுந்தர் சி தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த படத்தை யார் இயக்கு போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினி படத்தை தனுஷ் இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தனுஷ் இயக்குவது உறுதியானால் எந்த மாதிரி கதையை அவர் எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த காம்போ எப்படி இருக்கும்?
Similar News
News November 17, 2025
தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா

தமிழகத்தில் 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026-ல் நிச்சயம் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், விஜயகாந்தின் கனவு, லட்சியம் நிறைவேறும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் நிரந்தர முதல்வர் என யாரும் கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
காந்த கண்களால் கவரும் அனுபமா பரமேஸ்வரன்

சமீபத்தில் வெளியான ‘பைசன்’ படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனங்களில் அழுத்தமாக பதிந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில், தனது பார்வையாலேயே இதயங்களை கொள்ளை கொள்ளும் தேவதையாக வலம் வரும் அனுபமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. இளைஞர்களின் நெஞ்சங்களை கொத்தி செல்லும் அவரின் போட்டோஸை மேலே SWIPE செய்து கண்டு ரசியுங்கள்…
News November 17, 2025
சபரிமலையில் இன்று முதல் 90,000 பக்தர்களுக்கு அனுமதி

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 1-ம் தேதியான இன்று தொடங்கி 60 நாட்கள் இந்த சீசன் நடைபெறும். இந்நிலையில் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பேரும், உடனடி தரிசனம் மூலம் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் ஒரு மாத காலத்துக்கான முன்பதிவு இப்போதே முடிவடைந்துவிட்டது.


