News November 17, 2025
BREAKING: அமைச்சர் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி

கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள சிஎம்சி ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நலக் குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இன்று மாலை கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 14, 2026
ஒரு தலை காதல்.. உயிருடன் எரித்து கொலை

புதுச்சேரியில் நேற்றிரவு இளம்பெண் மீது ஜோசப் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90% உடல் எரிந்த நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் இன்று காலை உயிரிழந்தார். இதற்குமுன் இருவரும் பழகி பிரிந்த நிலையில், ஜோசப் தன்னை தொந்தரவு செய்வதாக அந்த பெண் ஏற்கெனவே போலீஸில் புகார் அளித்திருந்தார். இருந்தும் ஜோசப் அவரை விடாமல் துரத்தி கொலை செய்துள்ளார்.
News March 14, 2026
இனி INSTA-வில் பாதுகாப்பு இருக்காதா?

Instagram செயலியில் மே 8-ம் தேதி முதல் END-TO-END-ENCRYPTION நீக்கப்படும் என்று META அறிவித்துள்ளது. அனுப்புநர் – பெறுநர் இடையேயான குறுஞ்செய்தியை பிறர் பார்க்காமல் இருப்பதற்கான அம்சம் தான் END-TO-END-ENCRYPTION. இந்த பிரைவசி வசதியை CHATS-ல் இருந்து நீக்க உள்ளதால், INSTA பயனர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. மேலும் பாதுகாப்பான உரையாடலுக்கு WhatsApp-ஐ Meta பரிந்துரைந்துள்ளது.
News March 14, 2026
விமான நிலையத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய்

கூர்மையான பொருளை வைத்திருந்ததால் தனி விமானத்தில் ஏற விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படையினர் விஜய்யின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கத்திரிக்கோல் இருந்ததாக கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட பொருள் என கூறி அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். இதன்பின், 20 நிமிடங்கள் தாமதமாக விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். எதற்காக கத்தரிக்கோல் வைத்திருந்திருப்பார்?


