News April 21, 2024
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்காக ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (ஏப்.22) தேரோட்டமும், ஏப்.23ஆம் தேதி அதிகாலையில் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
Similar News
News February 3, 2026
படுத்த படுக்கையாகிவிட்டேன்: நடிகர் அரவிந்த்சாமி

90-களில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த்சாமி, திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் படுத்த படுக்கையாக இருந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். 2005-ம் ஆண்டு நடந்த விபத்து தன்னை ஒன்றரை வருடம் முடக்கிவிட்டதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்ததால், அந்த வலி நீண்ட நாள் தொடர்ந்ததாகவும், பிறகு ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாகவும் கூறினார்.
News February 3, 2026
BREAKING: மீண்டும் மழை வெளுத்து வாங்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றுமுதல் 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், தென் & டெல்டா மாவட்டங்களில் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். மேலும், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உஷார் மக்களே!
News February 3, 2026
தங்கத்திற்கு சலுகை.. அரசு புதிய அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் மத்திய நிதியமைச்சகம் புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, ஓராண்டுக்கு மேல் வெளிநாடுகளில் வசிக்கும் பெண்கள் 40 கிராம், மற்றவர்கள் 20 கிராம் வரை தங்க நகைகளை வரியின்றி கொண்டு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ₹75,000 வரையிலான நகைகளுக்கே வரிச் சலுகை வழங்கப்பட்டிருந்தது. புதிய விதிகள் நேற்று(பிப்.2) முதல் அமலாகியுள்ளன.


