News April 21, 2024
ஐபிஎல் : இன்றைய போட்டிகள்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, இரு அணி வீரர்களும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
Similar News
News February 6, 2026
வீட்டில் அழுக்கான இடம் இதுவா…. ஷாக் மேட்டர்!

நம் வீட்டில் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நிறைந்துள்ள இடம் சமையலறை தானாம். ஆம், பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ஜில் தான் அதிக எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. இதற்கு அடுத்து கிச்சன் சிங்க், டூத் பிரஷ் மற்றும் அதன் ஸ்டாண்ட், ரிமோட் கன்ட்ரோல், கீபோர்ட், காஃபி மேக்கர், பாத்ரூம் ஷெல்ப், டவல்கள், மிதியடிகள் மற்றும் கதவுகளின் கைப்பிடிகளில் கிருமிகள் நிறைந்துள்ளன. சுத்தம் பராமரியுங்கள்!
News February 6, 2026
மாதம் ₹7,000.. உடனே இதை பண்ணுங்க!

கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ₹7,000 உதவித்தொகையை எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம் வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் இந்த 3 ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு LIC முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம். இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்ளை செய்ய இங்க <
News February 6, 2026
BREAKING: நாளை Uber, Ola ஸ்டிரைக்!

நிலையற்ற ஊதியம் & விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து Uber, Ola, Rapido உள்ளிட்ட தளங்களின் டிரைவர்கள், நாளை (பிப்.7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2025-ம் ஆண்டே மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்திருந்தாலும், தளங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, நாளை பஸ், ரயில் போன்றவற்றை பயன்படுத்திக்கோங்க மக்களே..


