News April 21, 2024
இஸ்ரேல் படைகள் தாக்குதலில் 14 பேர் பலி

காஸாவின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 6 சிறார்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அகதிகள் முகாம்கள், மருத்துவமனை பணியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதை சர்வதேச மனித உரிமை மீறல் எனவும், இதனை உடனடியாக தலையிட்டு ஐ.நா அமைப்புகள் கண்டிக்க வேண்டுமென பாலஸ்தீனிய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News February 5, 2026
EPS-ஐ அதிமுகவினரே நம்ப போவதில்லை: பெரியசாமி

அதிமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றவர் இப்போது எப்படி கூட்டணிக்கு சென்றார் என கேட்ட அவர், தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் பாஜகவுடன் அவர் கூட்டணியில் உள்ளார் என்றார். மேலும், EPS-ன் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்பப்போவதில்லை எனவும் மக்களும் நம்பப்போவதில்லை என்றும் பேசியுள்ளார்.
News February 5, 2026
நெருங்கும் தேர்தல் தேதி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, CEC ஞானேஷ்குமார் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பிப்.12, 13-ல் தமிழகம் வருகின்றனர். இதன்படி, சென்னையில் 2 நாள்கள் முகாமிட்டு தமிழக CEO அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ECI அறிவித்துள்ளது.
News February 5, 2026
தவெகவில் இருந்து முக்கியப்புள்ளி விலகலா?

விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் ஜான் ஆரோக்கியசாமி. இந்நிலையில், ஆதவ்வின் என்ட்ரிக்கு பிறகு தான் புறக்கணிக்கப்படுவதாக எண்ணும் ஜான் விஜய்யுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். கட்சியின் 3-ம் ஆண்டுவிழாவில் விஜய் கொடுத்த விருந்திலும் ஜான் பங்கேற்கவில்லையாம். மேலும் விஜய்யின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள ஜான், விரைவில் தவெகவில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளாராம்.


